சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - விஜயபிரபாகரன்
#CaptainNews |
#TamilNews |
#சுபஸ்ரீ |
#விஜயபிரபாகரன்
சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்..கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு விஜயபிரபாகரன் நேரில் சென்றார். சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர், சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், சுபஸ்ரீயின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார். பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தேமுதிக பின்பற்றும் என தெரிவித்த அவர், அண்மையில் திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் பேனர் வைக்கவில்லை என்பதை சுட்டிகாட்டி பேசினார். பேனர் விவகாரத்தில் தப்பு செய்தவர்கள் யாராலும் இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயபிரபாகரன் கேட்டு கொண்டார்..
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - விஜயபிரபாகரன் camera iphone 8 plus apk | |
171 Likes | 171 Dislikes |
6,041 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 22 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét